பணமதிப்பிழப்பு நடவடிக்கை: வேலையில்லா திண்டாட்டத்தை உருவாக்கி பொருளாதாரத் துயரத்தை விரைவுபடுத்தியது -மு.க.ஸ்டாலின்


பணமதிப்பிழப்பு நடவடிக்கை: வேலையில்லா திண்டாட்டத்தை உருவாக்கி பொருளாதாரத் துயரத்தை விரைவுபடுத்தியது -மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 8 Nov 2019 7:05 PM IST (Updated: 8 Nov 2019 7:05 PM IST)
t-max-icont-min-icon

பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் வேலையில்லா திண்டாட்டத்தை உருவாக்கி பொருளாதாரத் துயரத்தை விரைவுபடுத்தியது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:-

பணமதிப்பிழப்பு நடவடிக்கை சிறு தொழில்களை அழித்து, வேலையில்லா திண்டாட்டத்தை உருவாக்கி பொருளாதாரத் துயரத்தை விரைவுப்படுத்தியது. அதனால் தான் இன்று அரசு கூட  பணமதிப்பிழப்பு குறித்து அமைதியாக உள்ளது.

பொருளாதாரத்தை புத்துயிர் பெறுவதற்கும்,  வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் இப்போதாவது அரசு கவனம் செலுத்துமா என கேள்வி எழுப்பி உள்ளார்.

Next Story