மாநில செய்திகள்

சென்னையில் காற்று மாசுவை கட்டுப்படுத்த நடவடிக்கை - அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் + "||" + Action to control air pollution in Chennai - Anbumani Ramadas request

சென்னையில் காற்று மாசுவை கட்டுப்படுத்த நடவடிக்கை - அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

சென்னையில் காற்று மாசுவை கட்டுப்படுத்த நடவடிக்கை - அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்
பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை, 

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் கடந்த சில நாட்களாக காற்று மாசு கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரித்து வருகிறது. சென்னை மக்களை அவதிப்படுத்தும் காற்று மாசு அதிகரிப்பதற்கான காரணங்கள் எவை என்பது தெளிவாக தெரிந்தும், அவை சரி செய்யப்படாதது வருத்தமளிக்கிறது.

காற்று மாசுவைத் தடுக்க புதிய சட்டங்களோ, விதிகளோ வகுக்கத் தேவையில்லை. இப்போதுள்ள சுற்றுச்சூழல் விதிகளை முறையாக செயல்படுத்தினாலே போதுமானது. கொடுங்கையூர், பெருங்குடி ஆகிய இடங்களில் உள்ள குப்பைக் கிடங்குகள் 2015-ம் ஆண்டிலேயே காலாவதியாகி விட்டன. இந்த குப்பைக் கிடங்குகளை அகற்ற வேண்டும் என்பது தான் அனைத்துத் தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.

ஆனால், அதற்கு மாறாக, அந்த இரு குப்பைக் கிடங்குகளில் குப்பைகளை எரித்து மின்சாரம் தயாரிக்கும் மையத்தை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.

இது காற்று மாசுவை அதிகரிக்குமே தவிர, எந்த வகையிலும் குறைக்காது. எனவே, சென்னையின் இரு பெருங்குப்பைக் கிடங்குகளை மூடுவது உள்ளிட்ட சுற்றுச்சூழல் சீர்திருத்த பணிகளை மேற்கொள்வதன் மூலம் சென்னையில் காற்று மாசுவை குறைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. ‘வாழ்கின்ற காலத்திலேயே டாக்டர் ராமதாசுக்கு அங்கீகாரம் கொடுங்கள்’ அன்புமணி ராமதாஸ் பேச்சு
வாழ்கின்ற காலத்திலேயே டாக்டர் ராமதாசுக்கு அங்கீகாரம் கொடுங்கள் என்று சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.
2. ‘நீட்’ தேர்வின் நோக்கம் நிறைவேறியுள்ளதா? ஆய்வு செய்ய வல்லுனர் குழுவை அமைக்க வேண்டும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
‘நீட்’ தேர்வின் நோக்கம் நிறைவேறியுள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்ய வல்லுனர் குழுவை அமைக்க வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
3. தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி தொடரும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேட்டி
தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி தொடரும் என்று தர்மபுரியில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
4. ஹைட்ரோ கார்பன் திட்டம் தமிழகத்திற்கு தேவையில்லாதது : அன்புமணி ராமதாஸ் பேட்டி
ஹைட்ரோ கார்பன் திட்டம் தமிழகத்திற்கு தேவையில்லாதது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
5. கூட்டணிக்காக கொள்கையை விட்டு கொடுக்க மாட்டோம் : அன்புமணி ராமதாஸ் பேட்டி
கூட்டணிக்காக கொள்கையை விட்டு கொடுக்க மாட்டோம் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.