தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு


தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு
x
தினத்தந்தி 13 Nov 2019 9:58 AM IST (Updated: 13 Nov 2019 4:30 PM IST)
t-max-icont-min-icon

வேலூரை பிரித்து வேலூர்,திருப்பத்தூர், ராணிப்பேட்டை என 3 புதிய மாவட்டங்களாகவும், நெல்லையை பிரித்து நெல்லை,தென்காசி என 2 மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.

சென்னை,

வேலூரை பிரித்து வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை என 3 புதிய மாவட்டங்களாகவும், நெல்லையை பிரித்து நெல்லை, தென்காசி என 2 மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது .

வேலூர் மாவட்டத்தில் என்னென்ன தாலுக்காக்கள்?

வேலூர், குடியாத்தம், பேரணாம்பட்டு, கே.வி.குப்பம், அணைக்கட்டு, காட்பாடி, என ஐந்து தாலுக்காகளும்,வேலூர், குடியாத்தம் 2 வருவாய் கோட்டங்களும் உருவாக்கப்பட்டன.

திருப்பத்தூர் மாவட்டத்தில் என்னென்ன தாலுக்காக்கள்?

திருப்பத்தூர், வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி, ஆம்பூர் என நான்கு தாலுக்காகளும், திருப்பத்தூர், வாணியம்பாடி 2 வருவாய் கோட்டங்களும் உருவாக்கப்பட்டன.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் என்னென்ன தாலுக்காக்கள்?

வாலாஜா, நெமிலி, ஆற்காடு, அரக்கோணம் என நான்கு தாலுக்காகளும் ராணிப்பேட்டை, அரக்கோணம் 2 வருவாய் கோட்டங்களும் உருவாக்கப்பட்டன.

நெல்லை மாவட்டத்தில் என்னென்ன தாலுக்காக்கள்?

நெல்லை,சேரன்மகாதேவி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம், மானூர், திசையன்விளை என எட்டு தாலுக்காகளும், நெல்லை, சேரன்மகாதேவி ஆகிய 2 வருவாய் கோட்டங்களும் உருவாக்கப்பட்டன.

தென்காசி மாவட்டத்தில் என்னென்ன தாலுக்காக்கள்?

தென்காசி, சங்கரன்கோவில், சிவகிரி, ஆலங்குளம், திருவேங்கடம், கடையநல்லூர், செங்கோட்டை, வி.கே.புதூர், தென்காசி, என எட்டு தாலுக்காகளும், தென்காசி,  செங்கோட்டை ஆகிய 2 வருவாய் கோட்டங்களும் உருவாக்கப்பட்டன.

காஞ்சிபுரத்தை பிரித்து உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு, மதுராந்தகம், தாம்பரம் ஆகிய கோட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 

மேலும், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருப்போரூர், தாம்பரம், திருக்கழுக்குன்றம் பல்லாவரம், வண்டலூர் என 8 தாலுகாக்கள் இடம் பெற்றுள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத், குன்றத்தூர் ஆகிய தாலுகாக்கள் செயல்படும்.

Next Story