அதிமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தலுக்கான விருப்பமனு விநியோகம் தொடங்கியது
அதிமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தலுக்கான விருப்பமனு விநியோகம் தொடங்கியது. இன்றும், நாளையும் விருப்பமனுக்கள் விநியோகம் செய்யப்படவுள்ளன.
சென்னை,
அதிமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புவோர், மாவட்ட தலைமை அலுவலகங்களில் அதற்கான கட்டணங்களை செலுத்தி மனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என ஏற்கனவே கட்சித் தலைமை அறிவித்திருந்தது. அதன்படி விருப்பமனு விநியோகம் இன்று தொடங்கியது. அதிமுக சார்பில் போட்டியிட இன்றும், நாளையும் விருப்ப மனு விநியோகிக்கப்பட உள்ளது.
மேயர் பதவிக்கான விருப்பமனு கட்டணம் 25 ஆயிரம் ரூபாய், வார்டு உறுப்பினர் பதவிக்கான விருப்பமனு கட்டணம் 5 ஆயிரம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நகராட்சி தலைவர் பதவிக்கு 10 ஆயிரம் ரூபாயும், நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு 2 ஆயிரத்து 500 ரூபாயும், இதேபோல் பேரூராட்சி தலைவர் பதவிக்கு 5 ஆயிரம் ரூபாயும், பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ஆயிரத்து 500 ரூபாயும் விண்ணப்ப கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story