சென்னை ஐஐடி மாணவி பாத்திமா மரணம் தற்கொலை அல்ல ; பல மர்மங்கள் உள்ளன -மு.க.ஸ்டாலின்
சென்னை ஐஐடி மாணவி பாத்திமா மரணம் தற்கொலை அல்ல, அதில் பல மர்மங்கள் அடங்கியுள்ளன என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
பாத்திமாவின் தந்தை தமது மகள் மரணம் குறித்து நடவடிக்கை எடுக்க டி.ஜி.பி. திரிபாதியை நேரில் சந்தித்து மனு அளித்தார். இதனை தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பாத்திமாவின் தந்தை சந்தித்தார். அப்போது உடன் இருந்த எம்.எல்.ஏ. அபு பக்கர், இதுகுறித்து உயர்மட்ட விசாரணைக் குழு அமைத்திருப்பதாக தெரிவித்தார். அதனை தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினையும் நேரில் சந்தித்தார்.
இந்தநிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
சென்னை ஐஐடி மாணவி பாத்திமா மரணம் தற்கொலை அல்ல, அதில் பல மர்மங்கள் அடங்கி இருப்பதை அவரது பெற்றோர் எழுப்பும் கேள்விகள் உணர்த்துகிறது. அவர்களின் கண்ணீருக்கு நீதி கிடைக்க வேண்டும்.
குற்றவாளிகளை உடனடியாக கைது செய்வதன் மூலமாக நியாயத்தின் பக்கம் நிற்பதை தமிழக அரசு நிரூபிக்க வேண்டும்.
எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் ஆதிக்க சக்திகளின் கொடும்பற்கள் தனது கோரத்தாண்டவத்தை நிறுத்தவில்லை என்பதையே பாத்திமாவின் மரணம் காட்டுகிறது.
இதுபோன்ற நிகழ்வுகள் திராவிட இயக்கம் எப்போதும் தேவை என்பதை தொடர்ந்து உணர்த்துகின்றன.
இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.
சென்னை ஐஐடி மாணவி பாத்திமா மரணம் தற்கொலை அல்ல; அதில் பல மர்மங்கள் அடங்கி இருப்பதை அவரது பெற்றோர் எழுப்பும் கேள்விகள் உணர்த்துகிறது! அவர்களின் கண்ணீருக்கு நீதி கிடைக்க வேண்டும்!
— M.K.Stalin (@mkstalin) November 15, 2019
குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்வதன் மூலமாக நியாயத்தின் பக்கம் நிற்பதை தமிழக அரசு நிரூபிக்க வேண்டும். pic.twitter.com/Fc39OUy2Mr
எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் ஆதிக்க சக்திகளின் கொடும்பற்கள் தனது கோரத்தாண்டவத்தை நிறுத்தவில்லை என்பதையே பாத்திமாவின் மரணம் காட்டுகிறது!
— M.K.Stalin (@mkstalin) November 15, 2019
இதுபோன்ற நிகழ்வுகள் திராவிட இயக்கம் எப்போதும் தேவை என்பதை தொடர்ந்து உணர்த்துகின்றன #JusticeForFathimaLatheef
Related Tags :
Next Story