திமுக ஆட்சியின் போதும் மறைமுகத்தேர்தலை நடத்தி உள்ளார்கள் - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி


திமுக ஆட்சியின் போதும் மறைமுகத்தேர்தலை நடத்தி உள்ளார்கள் -  அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
x
தினத்தந்தி 20 Nov 2019 8:03 PM IST (Updated: 20 Nov 2019 8:03 PM IST)
t-max-icont-min-icon

திமுக ஆட்சியின் போதும் மறைமுகத்தேர்தலை நடத்தி உள்ளார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- 

சட்டப்படியே அவசர சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ.க்கள் தான் முதலமைச்சரை தேர்ந்தெடுக்கின்றனர்,  எம்.பி.க்கள் தான் பிரதமரை தேர்ந்தெடுக்கின்றனர். அதுபோலவே தற்போது கவுன்சிலர்கள் மேயரை தேர்ந்தெடுப்பார்கள்.

ஜனநாயகத்தில் அனுமதிக்கப்பட்டதே இந்த மறைமுகத்தேர்தல் முறை தான். திமுக ஆட்சியின் போதும் மறைமுகத்தேர்தல் நடந்து உள்ளது. 

மறைமுகத்தேர்தல் என்பது சட்டத்திற்கு உட்பட்டதே, சட்டத்திற்கு புறம்பானது அல்ல. தேர்தல் முறை மாறினாலும் தேர்தல் நடைபெறுகிறதா? என்பதை பார்க்க வேண்டும். மறைமுக தேர்தலுக்கு அவசரச்சட்டம் பிறப்பித்தது வியூகம் என்பது அல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story