சென்னை தி.நகரில் அடுக்குமாடியின் 4வது தளத்தில் தீ விபத்து


சென்னை தி.நகரில் அடுக்குமாடியின் 4வது தளத்தில் தீ விபத்து
x
தினத்தந்தி 3 Dec 2019 10:18 AM IST (Updated: 3 Dec 2019 10:18 AM IST)
t-max-icont-min-icon

சென்னை தி.நகரில் அடுக்குமாடி ஒன்றில் 4வது தளத்தில் உள்ள தனியார் நிறுவன அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

சென்னை,

சென்னை தியாகராய நகரில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்று உள்ளது.  இதன் 4வது தளத்தில் உள்ள தனியார் நிறுவன அலுவலகத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தகவல் அறிந்து தீயணைப்பு துறையை சேர்ந்த வீரர்கள் 3 வாகனங்களில் வந்தனர்.  அவர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.  இந்த அலுவலகம், சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் சேகர் ரெட்டிக்குரியது என தகவல் தெரிவிக்கின்றது.

Next Story