விக்ரம் லேண்டரை கண்டுபிடித்தது எப்படி? மதுரை என்ஜினீயர் பேட்டி
விக்ரம் லேண்டரை கண்டுபிடித்தது எப்படி என்பது குறித்து தமிழக கணினி என்ஜினீயர் சண்முக சுப்பிரமணியன் பேட்டி அளித்து உள்ளார்.
சென்னை,
விக்ரம் லேண்டரை கண்டுபிடித்தது எப்படி என்பது குறித்து மதுரையை சேர்ந்த கணினி என்ஜினீயர் சண்முக சுப்பிரமணியன், தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நாசாவின் பழைய மற்றும் புதிய புகைப்படங்களில் உள்ள புள்ளிகளை ஆய்வு செய்து விக்ரம் லேண்டர் பாகங்களை கண்டறிந்தேன். எனது கண்டுபிடிப்பை நாசா உறுதி செய்து அறிவித்தது மகிழ்ச்சியாக உள்ளது.
'சந்திரயான்-2 திட்டம்' நாம் முதல் முறையாக முயற்சி செய்து உள்ளோம். இது இஸ்ரோவுக்கு தோல்வி அல்ல. நாம் தொடர்ந்து முயற்சியில் ஈடுபடுவோம் என கூறினார்.
Related Tags :
Next Story