பெண் மருத்துவர் கொலை எதிரொலி; பாட்டில்களில் பெட்ரோல் வழங்க வேண்டாம்: பெட்ரோல் விற்பனையாளர் சங்கம்
தெலுங்கானாவில் பெண் மருத்துவர் எரித்து கொல்லப்பட்டதன் எதிரொலியாக பாட்டில்களில் பெட்ரோல் வழங்க வேண்டாம் என பெட்ரோல் விற்பனையாளர் சங்கம் கேட்டு கொண்டுள்ளது.
சென்னை,
தெலுங்கானாவில் கால்நடை மருத்துவராக பணியாற்றி வந்த பிரியங்கா ரெட்டி (வயது 27) என்பவர் ரங்கா ரெட்டி மாவட்டத்தின் சாத்நகர் பகுதியில் சுங்க சாவடி அருகே 4 பேர் கொண்ட கும்பலால் கற்பழித்து, எரித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.
சம்பவத்தன்று பெண் மருத்துவர் பிரியங்காவை எரித்து கொல்வதற்காக குற்றவாளிகள் அதிகாலை 1மணியளவில் பெட்ரோல் பங்கில் சென்று பெட்ரோல் வாங்கியுள்ளனர். பின்னர் அவரது உடலை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளனர்.
இந்த சம்பவம் எதிரொலியாக, தமிழகத்தில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் பாட்டில்களில் பெட்ரோல் வழங்க வேண்டாம் என்று பெட்ரோல் விற்பனையாளர் சங்கம் கேட்டு கொண்டுள்ளது.
Related Tags :
Next Story