ஜெயலலிதாவின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம்: முதல்வர் பழனிசாமி மரியாதை
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 3-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு முதல்வர் பழனிசாமி மரியாதை செலுத்தினார்.
சென்னை,
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில் ஜெயலலிதா திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ஜெயலலிதாவின் நினைவிடத்தில், முன்னாள் மேயர் சைதை துரைசாமி அஞ்சலி செலுத்தினார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர், ஜெயலலிதா மேற்கொண்ட நலத்திட்ட பணிகளை பட்டியலிட்டார். மேலும், ஜெயலலிதா மறைவால், நலத்திட்டங்களை பெறும் வாய்ப்பை மக்கள் தவறிவிட்டதாக கூறிய அவர், எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா ஆகிய இருதலைவர்களுக்கு நினைவிடத்தை தேர்வு செய்யும் வாய்ப்பு தமக்கு வாய்த்தது பெருமை என்றும் தெரிவித்தார்.
Related Tags :
Next Story