நாளை மாலை 5 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள் ஆலோசனை கூட்டம்
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக, சென்னையில் நாளை மாலை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
சென்னை,
தமிழகத்தில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. வேட்புமனு டிசம்பர் 6-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த நிலையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் என்று அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிசாமி ஆகியோர் தலைமையில் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story