தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: 17-ம் கட்ட விசாரணை நிறைவு


தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: 17-ம் கட்ட விசாரணை நிறைவு
x
தினத்தந்தி 6 Dec 2019 6:57 PM IST (Updated: 6 Dec 2019 6:57 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக இன்று 17 ஆம் கட்ட விசாரணை நடைபெற்றது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் விசாரணை  மேற்கொண்டு வருகிறது. இதுவரை நடத்தப்பட்ட 16 கட்ட விசாரணையில் மொத்தம் 410 பேர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். 

இந்நிலையில் 17-வது கட்ட விசாரணை, தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

இதில் ஆஜராக மொத்தம் 38 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் 22 பேர் ஆஜராகி விளக்கமளித்தனர். அவர்கள் அளித்த விளக்கத்தின் அடிப்படையில் ஒரு நபர் ஆணையம் இன்று விசாரணையை  நடத்தியது.

இதைத் தொடர்ந்து 17 ஆம் கட்ட விசாரணை நிறைவடைந்தது. அடுத்ததாக 18ம் கட்ட விசாரணை ஜனவரியில் தொடங்கும் என ஒரு நபர் விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.

Next Story