அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் விரிசல்; எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தம்


அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் விரிசல்; எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தம்
x
தினத்தந்தி 8 Dec 2019 1:20 AM GMT (Updated: 2019-12-08T06:50:25+05:30)

அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலால் ஆலப்புழா, காவேரி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டு உள்ளன.

சென்னை,

ராணிப்பேட்டை மாவட்டத்தின் அரக்கோணம் அருகே சித்தேரி பகுதியில் ரெயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு உள்ளது.  இதனால் அந்த வழியே செல்ல கூடிய ஆலப்புழா, காவேரி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டு உள்ளன.

ரெயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை சரி செய்வதற்காக ரெயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அந்த பகுதிக்கு சென்றுள்ளனர்.  அவர்கள் விரிசலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

Next Story