மறைமுக தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருமாவளவன் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி


மறைமுக தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருமாவளவன் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
x
தினத்தந்தி 10 Dec 2019 11:44 AM IST (Updated: 10 Dec 2019 11:44 AM IST)
t-max-icont-min-icon

மறைமுக தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருமாவளவன் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மதுரை,

மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தப்படும் என அவசர சட்டம் பிறப்பித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. மறைமுக தேர்தலின் படி, மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கான பிரதிநிதிகளை பொதுமக்கள் நேரடியாக வாக்களித்து தேர்ந்தெடுக்க மாட்டார்கள். மாறாக வார்டு கவுன்சிலர்கள் மூலம் அவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

தமிழக அரசு பிறப்பித்த இந்த அவசர சட்டத்துக்கு எதிராக  சென்னை உயர் நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. 

மேயர், நகராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தலுக்கு வழிவகை செய்யும் அவசர சட்டத்தை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம்  மறைமுக தேர்தல் நடத்துவது ஜனநாயகத்துக்கு விரோதமானதல்ல  என்று தெரிவித்துள்ளது. 

Next Story