தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியில் புதிய பொற்காலம் நிலவுகிறது - துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்
தமிழகத்தில் புதிய தொழில் தொடங்குவதற்கு 8,000 ஏக்கருக்கும் கூடுதலாக நிலம் தயார் நிலையில் இருப்பதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை
சென்னை தலைமை செயலகத்தில், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமெரிக்க-இந்திய தொழில் கூட்டமைப்பின் தொழில் முதலீட்டாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள தொழிற்பூங்கா, தகவல் தொழில்நுட்ப பூங்கா, மற்றும் மருத்துவ பூங்காக்களில் ஏறக்குறைய 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் இருக்கிறது. இதன் மூலம் புதிய தொழில்களை தொடங்கலாம்.
தமிழகத்தில் முதலீட்டாளருக்கு ஏற்ற சூழலை மேம்படுத்தவும் தொழில் வளர்ச்சி பெருகவும் துறை ரீதியாக கொள்கை முயற்சிகளை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியில் புதிய பொற்காலம் நிலவுகிறது என கூறினார்.
Related Tags :
Next Story