கட்சியாக பதிவாகியும் அமமுகவை தேர்தல் ஆணையம் நிராகரிக்கிறது- டிடிவி தினகரன் வேதனை


கட்சியாக பதிவாகியும் அமமுகவை தேர்தல் ஆணையம் நிராகரிக்கிறது- டிடிவி தினகரன் வேதனை
x
தினத்தந்தி 11 Dec 2019 6:36 AM GMT (Updated: 11 Dec 2019 6:36 AM GMT)

கட்சியாக பதிவாகியும் அமமுகவை தேர்தல் ஆணையம் நிராகரிக்கிறது என சென்னையில் பேட்டி அளித்த டிடிவி தினகரன் தெரிவித்து உள்ளார்.

சென்னை

உள்ளாட்சி தேர்தலில் டி.டி.வி.தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அ.ம.மு.க.) போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. ஒரே சின்னத்தை பெறுவதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு கட்சியையும் பதிவு செய்தது. இதனையடுத்து அ.ம.மு.க.வுக்கு உள்ளாட்சி தேர்தலில் ஒரே சின்னம் வழங்குமாறு மாநில தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை வைத்திருந்தது.

ஆனால், பதிவு செய்யப்பட்ட கட்சியாக இருந்தால் மட்டும் ஒரே சின்னம் வழங்க முடியாது என்று மாநில தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுத்துவிட்டது.

இந்த நிலையில் அமமுக, அரசியல் கட்சியாக பதிவு செய்த அறிவிப்பு ஆணையை  மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் வைத்து டிடிவி தினகரன் மரியாதை செலுத்தினார். 

பின்னர் அவர் நிருபர்களுக்கு  பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கட்சியாக பதிவாகியும் அமமுகவை தேர்தல் ஆணையம் நிராகரிக்கிறது. பதிவு செய்யப்பட்ட கட்சிக்கு பொது சின்னம் தர தேர்தல் ஆணையம் மறுக்கிறது என கூறினார்.

Next Story