நான் சசிகலாவின் ஆதரவாளர் தான் ஆனால் அரசியல் வேறு, விசுவாசும் வேறு - நடிகர் கருணாஸ்


நான் சசிகலாவின் ஆதரவாளர் தான் ஆனால் அரசியல் வேறு, விசுவாசும் வேறு - நடிகர் கருணாஸ்
x
தினத்தந்தி 12 Dec 2019 5:30 PM IST (Updated: 12 Dec 2019 6:28 PM IST)
t-max-icont-min-icon

நான் சசிகலாவின் ஆதரவாளர் தான் ஆனால் அதிமுகவுக்கு ஆதரவு அரசியல் வேறு, விசுவாசும் வேறு என்று கருணாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை

முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், எம்.எல்.ஏவுமான நடிகர் கருணாஸ் இன்று முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக-விற்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக-வுக்கு முக்குலத்தோர் புலிப்படை ஆதரவு அளிக்கிறது. பிரச்சாரமும் செய்ய உள்ளேன். நாங்கள் போட்டியிடவும் விரும்புகிறோம். அதை முதல்வரிடம் தெரிவித்துள்ளேன்.

குடிமராமத்து பணிகளை அதிமுக அரசு சிறப்பாக செய்துள்ளது. என்னுடைய தொகுதியில் அதன் பயன் கிடைத்துள்ளது. மக்கள் ஆதரவு அதிமுக அரசுக்கு அதிகரித்து உள்ளது.

நான் சசிகலா ஆதரவாளர் தான். அது எல்லோருக்கும் தெரியும்-மறைப்பதற்கில்லை. முதல்-அமைச்சருக்கும் தெரியும். சசிகலா வந்த பிறகு மற்ற நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படும். முக்குலத்தோர் புலிப்படை எதிர்காலத்திற்காக அதிமுக-வுக்கு ஆதரவு அளித்துள்ளோம் என கூறினார்.

Next Story