சென்னையில் திருவொற்றியூர் - அம்பத்தூர் தவிர அனைத்து மண்டலங்களிலும் நிலத்தடி நீர் மேம்பட்டுள்ளது

சென்னையை பொருத்தவரை நிலத்தடி நீர் திருவொற்றியூர் மற்றும் அம்பத்தூர் தவிர அனைத்து மண்டலங்களிலும் நிலத்தடி நீர் மேம்பட்டுள்ளது.
சென்னை
வடகிழக்கு பருவமழை எதிரொலியால் கடந்த 10 ஆண்டில் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டம் 32 மாவட்டங்களில் அதிகரித்து உள்ளது.
தமிழகத்தில் கடந்த 2018ல் வடகிழக்கு பருவமழை பொய்த்த நிலையில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்தது. குறிப்பாக, மாநிலத்தில் 32 மாவட்டங்களில் 27 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் மிக அதிக அளவில் குறைந்தது. இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை அக்டோபர் 17ம் தேதி தொடங்கியது. இந்த பருவமழை காரணமாக மாநிலம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்தது. இதனால், அணைகள், ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்து உள்ளது.
குறிப்பாக கடந்தாண்டு டிசம்பர் மாதத்தை ஒப்பிடுகையில் அதிகபட்சமாக தூத்துக்குடியில் 3.08 மீட்டர், சேலத்தில் 5.42 மீட்டர், அரியலூர் 3.55 மீட்டர், பெரம்பலூர் 3.85 மீட்டர், திருச்சி 2.73 மீட்டர், விழுப்புரத்தில் 2.23 மீட்டர், திருவண்ணாமலை 2.79 மீட்டர், காஞ்சிபுரத்தில் 2.01 மீட்டர் வரை நிலத்தடி நீர் மட்டம் வேகமாக உயர்ந்து இருப்பது ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
கடந்த 10 ஆண்டில் இல்லாத அளவுக்கு இந்த முறை வடகிழக்கு பருவமழையால் அனைத்து மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மெட்ரோவாட்டர் நிர்வாகம் ஒவ்வொரு மாதமும் நகரத்தின் 15 மண்டலங்களில் நிலத்தடி நீரை ஆழமற்ற கண்காணிப்பு கிணறுகளிலிருந்து அளவிடுகிறது. அதன்படி வடகிழக்கு பருவமழை முடிவடைந்த நிலையில் சென்னையை பொருத்தமட்டில் நிலத்தடி நீர் திருவொற்றியூர் மற்றும் அம்பத்தூர் தவிர அனைத்து மண்டலங்களிலும் நிலத்தடி நீர் மேம்பட்டுள்ளது நவம்பருடன் ஒப்பிடும்போது ஓரளவு குறைந்து உள்ளது என தெரியவந்து உள்ளது.
தேனாம்பேட்டையில் நவம்பர் மாதத்தில் நிலத்தடி நீர் மட்டம் 4.62 மீ ஆக இருந்தது அது டிசம்பரில் 4.66 மீ ஆகக் குறைந்தது.
கோடம்பாக்கத்தில், நவம்பர் மாதத்தில் நீர் மட்டம் 5.55 மீ ஆக இருந்தது, டிசம்பரில் 5.66 மீ ஆக குறைந்தது.
தென் சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் நிலத்தடி நீர் மேம்பட்டுள்ளது. ஆலந்தூர், அடையார். பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய இடங்களில் நீர்மட்டம் அதிகரித்து உள்ளது.
ஆலந்தூரில், நவம்பர் மாதத்தில் நிலத்தடி நீர் 4.63 மீட்டராக இருந்தது. அண்மையில் பெய்த மழையின் பின்னர், இது 4.05 மீட்டராக உயர்ந்து உள்ளது.
அடையாரில், 4.21 மீட்டரிலிருந்து 3.98 மீட்டராக உயர்ந்துள்ளது. பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூரில், 2018 நவம்பரில் 3.78 மீ மற்றும் 3.45 மீ. டிசம்பரில், இது முறையே 3.15 மீ மற்றும் 2.68 மீட்டராக உயர்ந்து உள்ளது.
பருவமழை 17 சதவீதம் பற்றாக்குறை இருந்தபோதிலும், 2018 டிசம்பருடன் ஒப்பிடும்போது நகரம் முழுவதும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
இது குறித்து மெட்ரோ வாட்டர் நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாவது;-
திருவொற்றியூர் மற்றும் அம்பத்தூர் ஆகியவை மெட்ரோவாட்டரின் கூடுதல் பகுதிகளில் வருகிறது. இந்த பகுதிகள் இன்னும் குழாய் நீரைப் பெறவில்லை. குழாய் வழியாக நீர் வழங்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இந்த பகுதிகளில் வசிப்பவர்கள் நிலத்தடி நீரை முற்றிலும் நம்பியிருக்கிறார்கள். பருவமழைக்குப் பிறகு, அவர்கள் தொடர்ந்து தண்ணீரை நிலத்தடி நீரையே பயன்படுத்தினர். இதனால் இந்த் அப்பகுதிகளில் நிலத்தடி நீர் அட்டவணையில் ஓரளவு குறைவதற்கு வழிவகுத்தது.
மே 2019 க்குள், ராயபுரம், திருவல்லிக்கேணி மற்றும் ராயப்பேட்டை பகுதிகளில் கடல் நீர் ஊடுருவல் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக ஆழ்துளை கிணறுகள் குடியிருப்பாளர்களால் பயன்படுத்தப்படவில்லை என்று மெட்ரோவாட்டர் அதிகாரி கூறினார்.
Related Tags :
Next Story