இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க தமிழக அரசு சார்பில் மத்திய அரசை வலியுறுத்துகிறேன் - பன்வாரிலால் புரோகித்


இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க தமிழக அரசு சார்பில் மத்திய அரசை வலியுறுத்துகிறேன் - பன்வாரிலால் புரோகித்
x
தினத்தந்தி 6 Jan 2020 10:46 AM IST (Updated: 6 Jan 2020 10:46 AM IST)
t-max-icont-min-icon

இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க தமிழக அரசு சார்பில் மத்திய அரசை வலியுறுத்துகிறேன் என கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசினார்.

சென்னை,

ஆண்டுதோறும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டின் (2020) முதல் கூட்டத் தொடர் இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது.

கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று சட்டசபையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றிவருகிறார்.

தமிழக அரசின் திட்டங்கள் குறித்து கவர்னர் விளக்கம் அளித்தார். அப்போது கவர்னர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து கவர்னர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டாலின் தலைமையில் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

கவர்னர் உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* மத வேறுபாடின்றி தமிழக மக்கள் அனைவரின் நலனும் பாதுகாக்கப்படும்!

* ஜெயலலிதா நினைவு மண்டபம் விரைவில் கட்டி முடிக்கப்படும்!

* காவிரி - தெற்கு வெள்ளாறு இணைப்புத் திட்டம் வரும் நிதியாண்டில் மேற்கொள்ளப்படும்!

* மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை தமிழக அரசு நிறைவேற்றி வருகிறது.

* 2011 கவர்னர் உரையில் அறிவிக்கபட்ட 103 திட்டங்களில் 73 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.

* 2017 பிப்ரவரிக்கு பிறகு முதல் அமைச்சர் 453 அறிவிப்புகளை வெளியிட்டார். இதில் 114 திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்பட்டு உள்ளன.

* பலவேறு தடைகளுக்கு மத்தியில் உள்ளாட்சி தேர்தல் திறம்பட நடத்தப்பட்டு உள்ளது.

* மக்களாட்சியை பரவலாக்குவதில் அரசு முனைப்பு காட்டி வருகிறது.

* சட்டம் ஒழுங்கு சிறப்பாக நிலை நாட்டப்பட்டதில் தமிழக அரசுக்கு முதலிடம் வழங்கபட்டு உள்ளது.

* இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க தமிழக அரசு சார்பில் மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.

* பிரதமர் மோடி -சீன அதிபர் சந்திப்பை தமிழக அரசு சிறப்பாக நடத்தியது.

* மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதிக்க கூடாது.

* காவிரி - தெற்கு வெள்ளாறு இணைப்பு திட்டம் இந்த நிதியாண்டில் மேற்கொள்ளப்படும். 

* மாமல்லபுரம் சுற்றுலா மேம்பாட்டிற்கு ரூ.563.50 கோடி மதிப்பீட்டில் திட்டம்.

* நடப்பாண்டு இதுவரை ஜிஎஸ்டி இழப்பீடாக ரூ.7,096 கோடி பெறப்பட்டுள்ளது.

Next Story