குடியுரிமை சட்டதிருத்த விவகாரம் : சட்டசபையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு


குடியுரிமை சட்டதிருத்த விவகாரம் : சட்டசபையில் இருந்து திமுக  உறுப்பினர்கள் வெளிநடப்பு
x
தினத்தந்தி 7 Jan 2020 6:08 AM GMT (Updated: 7 Jan 2020 6:08 AM GMT)

குடியுரிமை சட்டதிருத்த விவகாரம் தொடர்பாக சட்டசபையில் இருந்து இன்று திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

சென்னை

தமிழக சட்டசபை இந்த ஆண்டின் முதல் கூட்டம் நேற்று தொடங்கியது. இதில் கவர்னர் பன்வாரி லால் புரோஹித் உரையாற்றினார். குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக நேற்று திமுக எம் எல் ஏக்கள் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

சட்டசபையின் 2-வது நாள் கூட்டம் இன்று தொடங்கியது. சட்டபையில் மு.க.ஸ்டாலின் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியுள்ளேன் என கூறினார். அதற்கு  சபாநாயகர் நீங்கள் கொடுத்த மனு ஆய்வில் உள்ளது என கூறினார். பாஜக அரசு கொண்டு வந்துள்ள சட்டம் ஒருமைப்பாட்டிற்கு உகந்தது அல்ல என மு.கஸ்டாலின் கூறினார்.

துரைமுருகன் கூறும்போது, ஆய்வு செய்து தீர்மானம் எடுத்துக்கொள்ளப்படும் என்ற பொன்னான வார்த்தையை சொல்லிவிட்டால் நாங்கள் திருப்தியடைவோம் என கூறினார்.

தொடர்ந்து குடியுரிமை சட்டதிருத்த  விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் இருந்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் இன்றும் 2-வது நாளாக  வெளிநடப்பு செய்தனர்.

திமுகவுடன் காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும்  தமிமுன் அன்சாரி, அபூபக்கர் ஆகியோரும் வெளிநடப்பு செய்தனர்.

வெளிநடப்புக்கு பின் சட்டசபை வளாகத்தில் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

குடியுரிமை சட்டதிருத்த விவகாரத்தில் நாடே பற்றி எரிந்து கொண்டிருக்கிறது, ஆங்காங்கே கலவரம் துப்பாக்கிச்சூடு என நடைபெறும்போது இதனை பேரவையில் விவாதிக்க வேண்டும். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தினேன். எனது கோரிக்கையை ஏற்க மறுத்ததால் வெளிநடப்பு செய்தோம். ஜனவரி 2ந் தேதி மனு அளித்தோம். இதுவரை மனுவை எடுக்கவில்லை. சட்டசபை இன்னும் 2 நாட்களே நடக்க இருப்பதால் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கூறினார்.

Next Story