இளைஞர்கள் அரசு பணிக்கு ஆசைப்படாமல், தொழில் முனைவோராக முயற்சிக்க வேண்டும் -அமைச்சர் ஜெயக்குமார்

இளைஞர்கள் படித்து முடித்ததும் அரசு பணிக்கு ஆசைப்படாமல், தொழில் முனைவோராக முயற்சி செய்யுமாறு அமைச்சர் ஜெயக்குமார் சட்டசபையில் கேட்டுக் கொண்டார்.
சென்னை
தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் முருகுமாறனின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-
மீன் சாப்பிட்டால் கண் நன்றாக தெரியும். நான் 55 வயதில் தான் கண்ணாடி அணிந்தேன்.
தமிழகத்தில் இருந்து ஆண்டுக்கு 5 லட்சம் டன் மீன்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஒரு ஹெக்டேரில் மீன் வளர்ப்புத் தொழில் செய்தால் பத்து மாதங்களில் 1 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டலாம்.
மீன் வளர்ப்பு தொழிலுக்கு அரசு மானியம் வழங்க தயாராக உள்ளது. இளைஞர்கள் படித்து முடித்ததும் அரசு பணிக்கு ஆசைப்படாமல், தொழில் முனைவோராக முயற்சி செய்ய வேண்டும் என்று கூறினார்.
Related Tags :
Next Story