சென்னையில் ஏசி பஸ்கள் இயக்கம் -குறைந்தபட்ச கட்டணம் ரூ.15 அதிகபட்ச கட்டணம் ரூ.60


சென்னையில் ஏசி பஸ்கள் இயக்கம் -குறைந்தபட்ச கட்டணம் ரூ.15 அதிகபட்ச கட்டணம் ரூ.60
x
தினத்தந்தி 10 Jan 2020 9:54 AM GMT (Updated: 2020-01-10T15:24:56+05:30)

சென்னையில் இன்று முதல் ஏசி பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.15, அதிகபட்ச கட்டணம் ரூ.60 ஆகும்.

சென்னை

சென்னையில் இதற்கு முன் ஏ.சி வசதி கொண்ட பேருந்துகள் பல வழித்தடங்களில் மாநகர போக்குவரத்துக் கழகம் மூலம் இயக்கப்பட்டன. ஆனால், பல்வேறு காரணங்களால் ஏ.சி பேருந்துகள் படிப்படியாக குறைக்கப்பட்டு ஒரு கட்டத்தில் முற்றிலும் நிறுத்தப்பட்டன.

இந்த நிலையில், ஒரு  இடைவெளிக்குப் பின்னர் மாநகர போக்குவரத்துக் கழகம் மீண்டும் ஏ.சி பேருந்துகளை இயக்கி உள்ளது. கோயம்பேடு - வேளச்சேரி (தடம் எண்:570) மற்றும் திருவான்மியூர் - தாம்பரம் (தடம் எண்:91) ஆகிய  தடங்களில் தற்போது ஏசி பேருந்து இயக்கப்படுகிறது.

சமீபத்தில் மாநகரப் போக்குவரத்துக் கழகம் தலா ₹36 லட்சம் மதிப்பு கொண்ட 48 பேருந்துகளை வாங்கியுள்ளது. விரைவில், மேலும் 5 வழித்தடங்களில் ஏசி பேருந்துகள் இயக்கப்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். சென்ட்ரல் - திருவான்மியூர், தி.நகர் - கேளம்பாக்கம், கோயம்பேடு - வண்டலூர், கிழக்கு தாம்பரம் - திருவான்மியூர், பிராட்வே - கேளம்பாக்கம் ஆகிய வழித்தடங்களில் இந்த ஏசி பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

குறைந்தபட்ச கட்டணமாக ஏசி பேருந்தில் ரூ.15 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ரூ.60 கட்டணமாக உள்ளது. 2018-ல் இயக்கப்பட்ட வால்வோ ஏசி பேருந்தில் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.28 இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story