இலங்கை வருமாறு நடிகர் ரஜினிக்கு விக்னேஷ்வரன் அழைப்பு


இலங்கை வருமாறு நடிகர் ரஜினிக்கு விக்னேஷ்வரன் அழைப்பு
x
தினத்தந்தி 12 Jan 2020 2:54 PM IST (Updated: 12 Jan 2020 2:54 PM IST)
t-max-icont-min-icon

இலங்கை வருமாறு நடிகர் ரஜினிக்கு இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.

சென்னை,

சென்னையில் உலகத் தமிழா் வம்சாவளி ஒன்று கூடல் நிகழ்ச்சி  நேற்று  நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு உலகத் தமிழ் வா்த்தகச் சங்கம், உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

இதில் சிறப்பு அழைப்பாளராக இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன்  கலந்து கொண்டு பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவா்களுக்கு சாதனை தமிழா்கள், சாதனை தமிழச்சிகள் என்ற பெயரிலான விருதுகளை வழங்கினார்.

இந்நிலையில், தமிழக பயணத்தின் ஒரு பகுதியாக சென்னை போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்தை வடக்கு மாகாண முன்னாள் முதல்வா் விக்னேஷ்வரன் சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது இலங்கையில் தற்போது தமிழர்களின் அரசியல் நிலை குறித்து ரஜினிகாந்திடம் பேசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ரஜினிகாந்த் இலங்கைக்கு விரைவில் வர வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.
1 More update

Next Story