2020-21 பட்ஜெட் குறித்து தலைவர்கள் கருத்து

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2020-21 பட்ஜெட் குறித்து தலைவர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
சென்னை
பட்ஜெட் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கூறி உள்ளதாவது:-
பட்ஜெட்டில் புதிய திட்டங்களில் கவனம் செலுத்தப்பட்டு உள்ளது. வேலை வாய்ப்பை அதிகரிக்கும் பல திட்டங்கள் பட்ஜெட்டில் உள்ளன. இதனால் இளைஞர்கள் பயனடைவார்கள் என கூறி உள்ளார்.
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறும் போது, நடுத்தர வர்க்கத்தினருக்கான வரிச்சலுகையை காங்கிரஸ் வரவேற்கிறது. பொருளாதாரத்தை உயர்த்தவும் , ஊக்குவிக்கவும் எந்த அம்சமும் பட்ஜெட்டில் இல்லை என கூறி உள்ளார்.
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, பட்ஜெட்டில் நிறைய அம்சங்கள் இருக்கும் என எதிர்பார்த்து ஏமாந்து உள்ளோம் என கூறி உள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி, மத்திய பட்ஜெட்டில் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு இல்லை, தமிழகத்திற்கு பயன் தருகிற எந்த அறிவிப்பும் இல்லை. பொதுத்துறை நிறுவனங்களை ஒழிக்க முயற்சி, வளர்ச்சியை நோக்கமாக இல்லாத வெறும் வார்த்தை ஜாலங்களால் சமர்ப்பிக்கபட்ட பட்ஜெட் என கூறி உள்ளார்.
பட்ஜெட் குறித்து கமல்ஹாசன் தனது ட்விட்டரில்,
அதிகாரிகளுக்கு அல்வாவுடன் ஆரம்பிக்கப்பட்ட பட்ஜெட், மக்களுக்கு அல்வாவுடன் முடிவடைந்தது. நீண்ட உரை, ஆனால் சரியான தீர்வுகள் இல்லை. என கூறி உள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறி இருப்பதாவது:-
வேலை வாய்ப்பை பெருக்குவதற்கான குறிப்பிட்ட செயல் திட்டங்களோ, பொருளாதாரத்தை மீட்பதற்கான உறுதியான அறிவிப்புகளோ இல்லாமல் பளபளக்கும் வார்த்தைகள் நிரம்பிய பிரச்சார உரையைப் போல் பட்ஜெட் ஏமாற்றமளிக்கிறது என கூறி உள்ளார்.
Related Tags :
Next Story






