முதல் அமைச்சர் தலைமையில் வருகிற 4ந்தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்


முதல் அமைச்சர் தலைமையில் வருகிற 4ந்தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்
x
தினத்தந்தி 2 Feb 2020 5:22 PM IST (Updated: 2 Feb 2020 5:22 PM IST)
t-max-icont-min-icon

தமிழக அமைச்சரவை கூட்டம் முதல் அமைச்சர் பழனிசாமி தலைமையில் வருகிற 4ந்தேதி நடைபெறுகிறது.

சென்னை,

சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி தலைமையில், அமைச்சரவை கூட்டம் வருகிற 4ந்தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.  இக்கூட்டத்தில் துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், துறை சார்ந்த அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

இந்த கூட்டத்தில் மாநில பட்ஜெட் தாக்கல் செய்வது பற்றி ஆலோசிக்கப்படுகிறது.  இதேபோன்று, தமிழகத்தில் தொழில் வளர்ச்சி, உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதல் தமிழகத்தில் பரவாமல் தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது.
1 More update

Next Story