மக்களை மத ரீதியாக துண்டாட துணிகிறார்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்


மக்களை மத ரீதியாக துண்டாட துணிகிறார்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 2 Feb 2020 8:08 PM GMT (Updated: 2020-02-03T01:38:20+05:30)

மக்களை மத ரீதியாக துண்டாட துணிகிறார்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை, 

தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

பா.ஜ.க.வுக்கு அ.தி.மு.க. பாதம் தாங்குவது குறித்து நமக்கு ஆட்சேபணை இல்லை. அதற்காக நெஞ்சில் நஞ்சும், வாயில் வன்மமும் கொண்டு நாட்டை வன்முறைப் பாதைக்கு மாற்ற ராஜேந்திர பாலாஜி என்ற ஒரு அமைச்சர் திட்டமிடுவது வன்மையான கண்டனத்துக்குரியது.

அரசியலமைப்பு சட்டப்படி பதவிப் பிரமாணம் எடுத்தவர் கண்ணுக்கு முன்னால் மதச்சார்பின்மைக்கு எதிராக பேசுகிறார். மக்களை மத ரீதியாக துண்டாட துணிகிறார். ராஜேந்திர பாலாஜியை கவர்னர் பதவிநீக்கம் செய்வதோடு, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story