அண்ணாவின் 51-வது நினைவு தினம்; திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி


அண்ணாவின் 51-வது நினைவு தினம்; திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி
x
தினத்தந்தி 3 Feb 2020 3:43 AM GMT (Updated: 3 Feb 2020 3:43 AM GMT)

அண்ணாவின் 51-வது நினைவு தினத்தையொட்டி திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதி பேரணி நடந்தது.

சென்னை,

முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி சென்னையில் திமுக சார்பில் அமைதிப் பேரணி நடைபெற்றது. சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்து அண்ணா நினைவிடம் வரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடந்தது.

இந்த பேரணியில் தி.மு.க பொருளாளார் துரைமுருகன், முதன்மை செயளாலர் கே.என்.நேரு உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். மெரினா கடற்கரையில்  உள்ள அண்ணா நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை மரியாதை செலுத்தினார்கள்.

அதையடுத்து மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்திலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.

Next Story