டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு விசாரணையில் திடீர் திருப்பம்...விடைத்தாள் நிறம் மாறியது கண்டுபிடிப்பு


டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு விசாரணையில் திடீர் திருப்பம்...விடைத்தாள் நிறம் மாறியது கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 4 Feb 2020 6:17 AM GMT (Updated: 4 Feb 2020 6:17 AM GMT)

டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் முறைகேடு விசாரணையில் திடீர் திருப்பம் ஏற்பட்டு உள்ளது. அழியும் மை பேனா கொண்டு நிரப்பப்பட்ட விடைத்தாள்கள் நிறம் மாறியது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

சென்னை

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த 2017-ம் ஆண்டு நடத்திய குரூப்- 2 ஏ தேர்வில் ராமேசுவரம் மையத்தில் எழுதிய 42 தேர்வர்கள் முறைகேட்டில் ஈடுபட்டு அதிக மதிப்பெண்கள் பெற்றதாக டி.என்.பி.எஸ்.சி. சார்பில் சி.பி.சி.ஐ.டி. போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

அதனடிப்படையில் சி.பி. சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் முறைகேடு விசாரணையில் திடீர் திருப்பம் ஏற்பட்டு உள்ளது. அழியும் மை பேனா கொண்டு நிரப்பப்பட்ட விடைத்தாள்கள் நிறம் மாறியது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஏ, குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரத்தில்  தலைமறைவாக உள்ள காவலர் சித்தாண்டி, மனைவி பிரியா ஆகிய இருவரின் வங்கி கணக்குகளை முடக்கி உள்ளதாக சிபிசிஐடி தகவல் தெரிவித்து உள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கில் தேடப்பட்டு வரும் இடைத்தரகர் ஜெயக்குமாரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளது.

Next Story