பாலில் கலப்படமா? அரசு தொடர்ந்து கண்காணிக்கிறது - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தகவல்

பாலில் கலப்படம் ஏற்படாமல் தடுக்க அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
சென்னை,
சென்னை தலைமைச் செயலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள கூட்ட அரங்கில் பால் வளத்துறை தொடர்பான ஆய்வுக் கூட்டம், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் அமைச்சர்கள் அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டம் முடிந்த பின்பு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதாவது:-
இந்தக் கூட்டத்தில் பால்வளத்துறையின் வளர்ச்சி குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்தியாவில் பால் உற்பத்தியில் உயர்ந்த மாநிலமாக தமிழகத்தை மாற்றவேண்டும். ஏற்றுமதி செய்யும் பாலின் அளவை அதிகரிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார்.
மேலும், பாலில் கலப்படம் இருக்கக்கூடாது என்று முதல்-அமைச்சர் கண்டிப்புடன் கூறினார். தனியார் பாலில் உள்ள கலப்படம் குறித்து கேட்டால், தனியார் பால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அனைத்து பாலும் பரிசோதிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story