போலீஸ் வேலைக்கான தேர்வு முடிவு வெளியீடு


போலீஸ் வேலைக்கான தேர்வு முடிவு வெளியீடு
x
தினத்தந்தி 5 Feb 2020 1:45 AM GMT (Updated: 2020-02-05T07:15:33+05:30)

போலீஸ் வேலைக்கான தேர்வு முடிவுகளை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.

சென்னை,

தமிழக காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்பு துறைகளில் உள்ள 8,773 பணி இடங்களுக்கு (2,432 பெண்கள்) முதலில் எழுத்து தேர்வு நடந்தது. பின்னர் உடல்தகுதி தேர்வுகள் நடத்தப்பட்டன.

அனைத்து தேர்வுகளும் முடிந்து நேற்று தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் விவரங்களை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.

தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் விவரங்களை www.tnusr-b-o-n-l-i-ne.org என்ற இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story