‘தமிழகத்தில் பா.ம.க. முதல் இடத்துக்கு வரவேண்டும்’ - மண்டல செயற்குழு கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேச்சு


‘தமிழகத்தில் பா.ம.க. முதல் இடத்துக்கு வரவேண்டும்’ - மண்டல செயற்குழு கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேச்சு
x
தினத்தந்தி 5 Feb 2020 11:15 PM GMT (Updated: 5 Feb 2020 11:11 PM GMT)

தமிழகத்தில் பா.ம.க. முதல் இடத்துக்கு வரவேண்டும் என்று கட்சியின் வடக்கு மண்டல செயற்குழு கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் கூறி உள்ளார்.

சென்னை, 

சென்னை தியாகராயநகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பா.ம.க.வின் வடக்கு மண்டல செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பா.ம.க. வடக்கு மண்டல இணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி தலைமை தாங்கினார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, பொருளாளர் திலகபாமா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-

பா.ம.க. ஆரம்பித்து 32 ஆண்டுகளில் ஒரு முறை கூட ஆட்சிக்கு வரவில்லை. வருகிற சட்டமன்ற தேர்தலில் 70 முதல் 80 எம்.எல்.ஏ.க்கள் பெற்றால் நாம் ஆட்சிக்கு வரும் திட்டம் உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த முடியாத நிர்வாகிகள் ஒதுங்கி கொள்ளுங்கள். பல கட்சிகளில் திறமையான நிர்வாகிகள் இல்லாத காரணத்தினால் ரூ.400 கோடி செலவு செய்து பீகாரில் இருந்து ஒருவரை இறக்கி உள்ளனர்.

தமிழக அரசியல் கார்ப்பரேட் வசம் சென்றுள்ளது. கார்ப்பரேட்டால் தான் நமக்கு பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திறமை உள்ள பா.ம.க. நிர்வாகிகள் கடினமாக உழைத்தால், தமிழகத்தில் வேறு கட்சிக்கு வேலை இல்லாத நிலை ஏற்படும். தமிழகத்தில் 3-வது இடத்தில் உள்ள பா.ம.க. முதலாவது இடத்து க்கு வர வேண்டும்.

பெரியார் வாழ்ந்த பூமியை கலவர பூமியாக மாற்ற நினைக்கிறார்கள். இந்த முறை நாம் கண்டிப்பாக ஆட்சிக்கு வந்தாக வேண்டும். தொகுதிக்கு 1 லட்சம் வாக்காளர்களை நாம் பெற வேண்டும். தனியாக நாம் போட்டியிட்டு ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாதது கேவலமாக உள்ளது. ஒவ்வொரு மாதமும் பா.ம.க. நிர்வாகிகளுக்கான தணிக்கை கூட்டம் நடைபெறும். வெற்றிக்காக பாடுபடுங்கள். இல்லை என்றால் புதியவர்களுக்கு இடம் விட்டு விலகிக் கொள்ளுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Next Story