பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் அதிரடி மாற்றம்


பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் அதிரடி மாற்றம்
x
தினத்தந்தி 6 Feb 2020 4:00 PM GMT (Updated: 2020-02-06T21:30:24+05:30)

பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் அதிரடியாக மாற்றப்பட்டு புதிய செயலாளராக தீரஜ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை,

தமிழக தலைமைச் செயலாளர் வெளியிட்ட  அறிக்கையில்,

தமிழக பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலராக இருந்த பிரதீப் யாதவ், கைத்தறித்துறை முதன்மை செயலராக மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஐ.ஏ.எஸ்., அதிகாரி தீரஜ்குமார், பள்ளிக்கல்வித்துறை செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை செயலராக கூடுதல் பொறுப்பையும் வகிப்பார்.

போக்குவரத்துத்துறை செயலராக இருந்த சந்திரமோகன், பிற்படுத்தப்பட்டோர், எம்.பி.சி., மற்றும் சிறுபான்மை நலத்துறை செயலாளராக மாற்றப்படுகிறார். 

தர்மேந்திர பிரதாப் யாதவ், போக்குவரத்துத்துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். கைத்தறி மற்றும் ஜவுளித்துறை செயலராக உள்ள குமார் ஜெயந்த், ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் தலைவராக நியமிக்கப்படுகிறார்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Next Story