திண்டுக்கல் சீனிவாசன் விவகாரத்தை பெரிதுப்படுத்துவது வேதனை அளிக்கிறது -முதல்வர் பழனிசாமி


திண்டுக்கல் சீனிவாசன் விவகாரத்தை பெரிதுப்படுத்துவது வேதனை அளிக்கிறது -முதல்வர்  பழனிசாமி
x
தினத்தந்தி 8 Feb 2020 10:19 AM GMT (Updated: 8 Feb 2020 10:19 AM GMT)

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விவகாரத்தை பெரிதுப்படுத்துவது வேதனை அளிக்கிறது என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

கோவை

கோவை விமான நிலையத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்காவுக்கு தலைவாசலில் நாளை அடிக்கல் நாட்டவுள்ளது.

டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது டிஎன்பிஎஸ்சி உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.

வயது முதிர்வு காரணமாக கீழே குனிய முடியாததால், சிறுவனை உதவிக்கு அழைத்ததாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனே கூறியுள்ளார்; வருத்தமும் தெரிவித்துவிட்டார், இதை பெரிதுப்படுத்துவது வேதனை அளிக்கிறது.

நடப்பாண்டில் நல்ல மழை பெய்து உள்ளதால் தமிழகத்தில் வறட்சி என்பதே இல்லை.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆன்மீகவாதி எனக்கு நன்கு தெரியும். அவர் கூறிய கருத்துக்கள் அதிமுகவின் கருத்துக்கல் இல்லை என ஏற்கனவே அமைச்சர் ஜெயக்குமார் ஏற்கனவே கூறி உள்ளார் என கூறினார்.

Next Story