குரூப் 4 தேர்வு - 19ஆம் தேதி முதல் கலந்தாய்வு: புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது - டிஎன்பிஎஸ்சி

குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வரும் 19ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
சென்னை,
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-4, குரூப்-2ஏ, கிராம நிர்வாக அதிகாரி தேர்வு (வி.ஏ.ஓ.) ஆகிய தேர்வுகளில் அரங்கேறிய முறைகேடுகள் பற்றி சி.பி.சி.ஐ.டி. போலீசார் தனித்தனியாக 3 வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த 3 வழக்குகளிலும் தொடர்புடைய முக்கிய குற்றவாளி ஜெயக்குமார் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். தற்போது போலீஸ் காவலில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அவர் அளிக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் கைது வேட்டை தினமும் நடக்கிறது. எனவே ஜெயக்குமாரிடம் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து குறுக்கு வழியில் தேர்ச்சி பெற்று அரசு பணிகளில் சேர்ந்தவர்கள் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வலையில் சிக்கி வருகிறார்கள்.
இந்த நிலையில், குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வரும் 19ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. மேலும் கலந்தாய்விற்கு வர தவறினால் மறுவாய்ப்பு வழங்கப்படாது என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. குரூப் 4 முறைகேடு வழக்கில் பலர் கைதாகி வரும் நிலையில் டிஎன்பிஎஸ்சி அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
Related Tags :
Next Story