சென்னையில் பிப்ரவரி 28-ம் தேதி வரை போராட்டம், ஆர்ப்பாட்டம், மனிதச்சங்கிலி, பொதுக்கூட்டம் நடத்த தடை


சென்னையில் பிப்ரவரி 28-ம் தேதி வரை போராட்டம், ஆர்ப்பாட்டம், மனிதச்சங்கிலி, பொதுக்கூட்டம் நடத்த தடை
x
தினத்தந்தி 13 Feb 2020 4:22 PM GMT (Updated: 2020-02-13T21:52:18+05:30)

சென்னையில் இன்று முதல் பிப்ரவரி 28 வரை போராட்டம், ஆர்ப்பாட்டம், மனிதச்சங்கிலி, பொதுக்கூட்டம் நடத்த தடை விதித்து மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் விடுத்துள்ள அறிக்கையில், 

சென்னையில்  14-ம் தேதி முதல் பிப்ரவரி 28-ம் தேதி வரை சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பொது இடங்கள், போக்குவரத்து பகுதிகளில் பொதுக்கூட்டங்கள், பேரணி, கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் மனித சங்கிலி போராட்டம் போன்றவற்றை நடத்த தடை விதிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story