முன்னாள் அமைச்சர் மறைவு: ஓபிஎஸ் - ஈபிஎஸ் இரங்கல்


முன்னாள் அமைச்சர் மறைவு: ஓபிஎஸ் - ஈபிஎஸ் இரங்கல்
x
தினத்தந்தி 14 Feb 2020 3:31 PM GMT (Updated: 2020-02-14T21:01:39+05:30)

கன்னியாகுமரியை சேர்ந்த முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபிரசாத் மறைவுக்கு ஓபிஎஸ் - ஈபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சென்னை, 

அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்–அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, கட்சி ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்–அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:–

முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. முன்னாள் செயலாளருமான கே.பி.ராஜேந்திரபிரசாத் உடல்நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மரணம் அடைந்துவிட்டார் என்ற செய்திகேட்டு மிகுந்த வருத்தமுற்றோம்.

கட்சியின் மீதும், ஜெயலலிதா மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டு பணியாற்றி வந்த ராஜேந்திரபிரசாத்தை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story