சிபிஎஸ்இ 10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது


சிபிஎஸ்இ 10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது
x
தினத்தந்தி 15 Feb 2020 5:25 AM GMT (Updated: 2020-02-15T10:55:36+05:30)

நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10,12 ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கியது.

சென்னை,

நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. இந்த தேர்வு மார்ச் மாதம் 20-ந் தேதி வரை நடைபெற இருக்கிறது.

நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில்10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான  பொதுத்தேர்வை மொத்தம் 30 லட்சத்து 96 ஆயிரத்து 771 பேர் எழுதுகின்றனர்.

அதில், 110 வகையான பாடப்பிரிவுகளுக்கு தேர்வுகள் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரையும், 19 பாடப்பிரிவுகளுக்கு காலை 10.30 மணி முதல் பிறப்கல் 12.30 மணி வரையும், 8 பாடப்பிரிவுகளுக்கு காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும் தேர்வுகள் நடைபெறுகிறது. முதல் 15 நிமிடங்கள் கேள்வித்தாளை வாசிப்பதற்கு நேரம் வழங்கப்படுகிறது.

10 ஆம் வகுப்பு தேர்வு 5 ஆயிரத்து 376 மையங்களில் 18 லட்சத்து, 89 ஆயிரத்து 878 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு மார்ச் 20 ஆம் தேதி நிறைவடைகிறது. இதேபோல 12 ஆம் வகுப்பு தேர்வை பொறுத்தவரை, 4 ஆயிரத்து 983 மையங்களில், 12 லட்சத்து 6 ஆயிரத்து 893 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

Next Story