புதிதாக அறிவிக்கப்பட்ட 9 மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிக்கல்நாட்டு விழா - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார்


புதிதாக அறிவிக்கப்பட்ட 9 மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிக்கல்நாட்டு விழா - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார்
x
தினத்தந்தி 15 Feb 2020 5:50 AM GMT (Updated: 2020-02-15T11:20:13+05:30)

புதிதாக அறிவிக்கப்பட்ட 9 மருத்துவக் கல்லூரிகளுக்கு மார்ச் 1 முதல் 14ம் தேதி வரை அடிக்கல்நாட்டு விழா நடைபெற இருக்கிறது அதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார்.

சென்னை,

தமிழகத்தில் புதிதாக மருத்துவக் கல்லூரி தொடங்க தமிழக அரசு மத்திய அரசுக்கு விண்ணப்பம் செய்திருந்தது. இதனையடுத்து தமிழக அரசு கேட்டிருந்த 9 மருத்துவக் கல்லூரிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. புதிய அரசு மருத்துவக்கல்லூரி கட்டுவதற்கு, தமிழக அரசு நிதியை ஒதுக்கி உள்ளது. அதேபோல் மத்திய அரசும் முதல்கட்ட நிதியை ஒதுக்கியது.  இதையடுத்து மருத்துவ கல்லூரி கட்டுவதற்கான பணிகள் குறித்து திட்டமிட்டு வந்தது.

இந்த நிலையில் புதிதாக அறிவிக்கப்பட்ட 9 மருத்துவக் கல்லூரிகளுக்கு மார்ச் 1 முதல் 14ம் தேதி வரை அடிக்கல்நாட்டு விழா நடைபெற இருக்கிறது அதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார். முதலில் மார்ச் 1ஆம்  தேதி இராமநாதபுரம் மற்றும் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார்.

அடுத்து மார்ச் 4 ஆம் தேதி கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரிக்கும் 5-ம்தேதி நாமக்கல் மருத்துவக் கல்லூரிக்கும் முதலமைச்சர் அடிக்கல் அடிக்கல் நாட்டுகிறார். மேலும் மார்ச் 5ம் தேதி கரூர் மற்றும் திண்டுக்கல் மருத்துவ கல்லூரிக்கும், 7-ம்தேதி நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரிக்கும், 8ம் தேதி திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கும், 14-ஆம் தேதி திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.
 
இந்த அடிக்கல்நாட்டு விழாவிற்காக தமிழகம் முழுவதும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.

Next Story