பழனி மலைக்கோவில் முதலாவது எண் மின்இழுவை ரயில் பராமரிப்பு பணி காரணமாக நாளை முதல் 20 நாட்களுக்கு இயக்கப்படாது - கோவில் நிர்வாகம்


பழனி மலைக்கோவில் முதலாவது எண் மின்இழுவை ரயில் பராமரிப்பு பணி காரணமாக நாளை முதல் 20 நாட்களுக்கு இயக்கப்படாது - கோவில் நிர்வாகம்
x
தினத்தந்தி 17 Feb 2020 8:23 AM GMT (Updated: 2020-02-17T15:07:59+05:30)

நாளை முதல் பழனி மலைக்கோவில் முதலாவது எண் மின்இழுவை ரயில் பராமரிப்பு பணி காரணமாக 20 நாட்களுக்கு இயக்கப்படாது என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

பழனி,

அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனி முருகன் மலைக்கோவிலுக்கு, பக்தர்கள் எளிதாக சென்று சுவாமி தரிசனம் செய்வதற்கு, கடந்த 1961ம் ஆண்டு மின்இழுவை ரயில் வசதி தொடங்கப்பட்டது. தற்பொழுது ரோப் கார் வசதி இருந்தாலும் மின்இழுவை ரயிலுக்கான மோகம் பக்தர்களிடம் குறையாமல் உள்ளது. 

இந்நிலையில் முதலாவது எண் மின்இழுவை ரயில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பராமரிப்பு பணி காரணமாக 20 நாட்களுக்கு இயக்கப்படாது  என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மின்இழுவைரயில் பெட்டி அதிக பக்தர்கள் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பக்தர்கள் எளிதில் மலைக்கோவிலுக்கு சென்று வருகின்றனர்.இதனால் பக்தர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story