காவிரி டெல்டா - பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்புக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்


காவிரி டெல்டா - பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்புக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்
x
தினத்தந்தி 19 Feb 2020 1:45 PM GMT (Updated: 2020-02-19T19:15:37+05:30)

காவிரி டெல்டா - பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்புக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.

சென்னை,

சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி  தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அனைத்துத் துறை அமைச்சர்களும் பங்கேற்றனர். இந்த அமைச்சரவை கூட்டத்தில் காவிரி டெல்டா - பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்புக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. 

அதற்கான  சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள 5 பேர் கொண்ட குழு அமைக்க தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து  முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நடைப்பெற்ற தமிழக அமைச்சரவை கூட்டம் நிறைவு பெற்றது.

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 14ஆம் தேதி தொடங்கியது. அதில், 2020-21ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் பள்ளி கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, சட்டப்பேரவையை வருகிற 17ஆம் தேதி வரை சபாநாயகர் ஒத்தி வைத்தார். அதன் பின்னர், அலுவல் ஆய்வு கூட்டத்தில் தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரை வருகிற 20ஆம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பட்ஜெட் தொடர் நேற்று முன் தினம் முதல் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளையுடன் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடையவுள்ளது. 

கடந்த வாரம் காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிக்கப்படும் என முதலமைச்சர்  பழனிசாமி சேலம் மாவட்டம் தலைவாசலில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Next Story