இந்தியாவில் உள்ள 13 மாநிலங்களில் என்.பி.ஆர்-க்கு எதிராக தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது - ஸ்டாலின்
இந்தியாவில் உள்ள 13 மாநிலங்களில் என்.பி.ஆர்-க்கு எதிராக தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது என்று மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக சட்டப்பேரவையில் என்.பி.ஆர்-க்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றாததைக் கண்டித்து திமுக வெளிநடப்பு செய்தது. வெளிநடப்பு செய்த பின் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த திமுக தலைவரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க ஸ்டாலின் கூறியதாவது:- “என்.பி.ஆர் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தோம்.
மக்கள் தொடர்ந்து போராடிக் கொண்டு வருகிறார்கள். ஏற்கனவே என்னென்ன தவறான தகவல்களைத் தந்தார்களோ, அதையே தான் திரும்பவும் கூறுகின்றனர். இந்தியாவில் உள்ள 13 மாநிலங்களில் என்.பி.ஆர்-க்கு எதிராகத் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது” என்றார்.
Related Tags :
Next Story