மாநில செய்திகள்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 100 % நோயாளிகளில் 97 % மக்கள் குணமடைந்து விடுவார்கள் - ஆய்வாளர் தகவல் + "||" + DEMYSTIFYING CORONA VIRUS | Dr. Pavithra Venkatagopalan

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 100 % நோயாளிகளில் 97 % மக்கள் குணமடைந்து விடுவார்கள் - ஆய்வாளர் தகவல்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 100 % நோயாளிகளில் 97 % மக்கள் குணமடைந்து விடுவார்கள் - ஆய்வாளர் தகவல்
வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 100 சதவீதம் எனில் 97 சதவீதம் சதவீதம் மக்கள் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துவிடுகின்றனர் என ஆய்வாளர் பவித்ரா வெங்கடகோபாலன் தெரிவித்துள்ளார்.
சென்னை

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 100 சதவீதம் நோயாளிகளில் 97 சதவீதம் மக்கள் குணமடைந்து விடுவார்கள் என கொரோனா வைரஸ் குறித்து ஆய்வுகளை மேற்கொண்ட பேராசிரியர் பவித்ரா வெங்கடகோபாலன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவும் விதம் குறித்து ஆய்வுகளை மேற்கொண்ட முனைவர். பவித்ரா வெங்கடகோபாலன் தனியார் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டி உயிரி ஆயுதம் ( bio weapon) உருவாக்கும் போது இந்த வைரஸ் வெளியானதாக சிலர் கூறுகின்றனர்.ஆனால் இயற்கையால் படைக்கப்பட்ட ஒரு பயங்கரமான வைரஸை விட செயற்கையான பயங்கரமான வைரஸை இதுவரை யாரும் உருவாக்கியது இல்லை, அதனால் இது ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட வைரஸ் இல்லை என பதிலளித்துள்ளார்.

கொரோனா வைரஸ் விலங்குகளிடமிருந்து பரவுகிறது என்பது தான் உண்மை. வௌவாலில் இருந்து சார்ஸ் வைரஸும், ஒட்டகத்திடமிருந்து மேர்ஸ் வைரஸும் பரவுகிறது.தற்போதுள்ள கொரோனா வைரஸ் வௌவாலிடம் இருந்து பரவியிருக்க 75 சதவீத  வாய்ப்புகள் உள்ளது. புள்ளிவிவரத்தின் படி பார்த்தால் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 100 சதவீதம் எனில் 97 சதவீதம் சதவீதம் மக்கள் வைரஸ் தொற்றுலிருந்து குணமடைந்துவிடுகின்றனர்.

மேலும் இதுவரை வெளியான தரவுகளின் அடிப்படையில் கொரோனா வைரஸ்தொற்றால் 5 வயது கீழ் உள்ள குழந்தைகளும், கர்ப்பிணிகளும் அதிக அளவில் பாதிக்கபடவில்லை என்பது தெரியவந்துள்ளது.சர்க்கரை நோய், சுவாசகோளாறு பிரச்சனை இருப்பவர்கள், 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இஞ்சி, பூண்டு, நிலவேம்பு கசாயம் சாப்பிட்டால் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பலாம் என்று கூறுகிறார்கள்,ஆனால் அது இன்னும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. நன்றாக சமைக்கப்பட்ட அசைவ உணவுகள் சாப்பிட்டால் கொரோனா வைரஸ் பரவாது.மேலும் அதிகம் வெயில் அடிக்கும் நாடுகளில் கொரோனா வைரஸ் பரவாது என்பது உண்மை கிடையாது.அதை யாரும் நம்ப வேண்டாம். கைகளை சுத்தமாக வைத்துக்கொண்டாலே கொரோனா பரவுவதை தவிர்க்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

டாக்டர்.பவித்ரா, அமெரிக்காவின் அரிஜோனா அரசுப் பல்கலைக் கழகத்தில் உயர் கல்வியும் டாக்டர் பட்டமும் பெற்றவர். அவரது டாக்டர் பட்டத்திற்கான ஆய்வு கரோனா வைரஸ் குறித்ததுதான் என்பது  சிறப்பு. 

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா வைரஸ்:காசநோய் பி.சி.ஜி தடுப்பூசி பயன்படுத்தும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இறப்பு விகிதம் 6 மடங்கு குறைவு
காசநோய் பி.சி.ஜி தடுப்பூசி பயன்படுத்திவரும் இந்தியா உள்பட நாடுகளில் கொரோனா வைரசால் இறப்பு விகிதம் 6 மடங்கு அளவுக்கு குறைவாக காணப்படுகிறது என ஆய்வில் தெரிய வந்து உள்ளது.
2. அத்தியாவசிய உணவு பொருட்களை பதுக்கினால் கடும் நடவடிக்கை"- மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்
அத்தியாவசிய உணவு பொருட்களை பதுக்கினால் கடும் நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.
3. ஊரடங்கை மீறி இன்று இரவு முஸ்லீம்கள் வெளியேவர வேண்டாம்- மத்திய மந்திரி
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 773 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.இன்று ஊரடங்கை மீறி முஸ்லீம்கள் இரவு வெளியே வரவேண்டாம் என மத்திய மந்திரி கோரிக்கை வைத்துள்ளார் .
4. கொரோனா தடுப்பு நடவடிக்கை: அரசியல் கட்சிகளின் நாடாளுமன்றக் குழுத் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அரசியல் கட்சிகளின் நாடாளுமன்றக் குழுத் தலைவர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று ஆலோசனை நடத்தினார்.
5. ஹைட்ராக்சிகுளோரோகுயின் விவகாரம்: இந்தியாவுக்கு டிரம்ப் பாராட்டு
ஹைட்ராக்சிகுளோரோகுயின் ஏற்றுமதி விவகாரத்தில் இந்தியாவுக்கு டிரம்ப் பாராட்டு தெரிவித்து உள்ளார்.