சென்னை-டெல்லி இடையே சிறப்பு பார்சல் எக்ஸ்பிரஸ் ரெயில் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு


சென்னை-டெல்லி இடையே சிறப்பு பார்சல் எக்ஸ்பிரஸ் ரெயில் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x
தினத்தந்தி 1 April 2020 3:15 AM IST (Updated: 1 April 2020 2:39 AM IST)
t-max-icont-min-icon

சென்னை-டெல்லி இடையே சிறப்பு பார்சல் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை, 

ரெயில் நிலையங்களில் அத்தியாவசிய தேவைகளுக்கான பொருள்கள் அடங்கிய ‘பார்சல்கள்’ அதிக அளவில் தேங்கி கிடப்பதால், அதனை எடுத்துச் செல்ல சிறப்பு பார்சல் ரெயில்கள் இயக்கபட்டு வருகின்றன. அதன்படி சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல்-டெல்லி இடையே சிறப்பு பார்சல் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

* சென்னை எம்.ஜி.ஆர்.சென்டிரல்-டெல்லி(வண்டி எண்: 00646) இடையே இயக்கப்படும் சிறப்பு பார்சல் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று(புதன்கிழமை) மற்றும் வருகிற 8-ந்தேதிகளில் மாலை 6 மணிக்கு புறப்பட்டு டெல்லி சென்றடைகிறது. மறுமார்க்கமாக டெல்லி-சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல்(00647) இடையே இயக்கப்படும் சிறப்பு பார்சல் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 4 மற்றும் 11-ந்தேதிகளில் மாலை 6 மணிக்கு புறப்பட்டு சென்னை எம்.ஜிஆர். சென்டிரல் வந்தடைகிறது.

* இதேபோல் யஸ்வந்த்பூர்-ஹவுரா(00603) இடையே சிறப்பு பார்சல் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று(புதன்கிழமை) மற்றும் வருகிற 4, 8, 11-ந்தேதிகளில் இயக்கப்படுகிறது. மறு மார்க்கமாக ஹவுரா-யஸ்வந்த்பூர்(00604) இடையே சிறப்பு பார்சல் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 3, 7, 10, 13-ந் தேதிகளில் இயக்கப்படுகிறது.

* ‘சென்னை எழும்பூர்-நாகர்கோவில்(வண்டி எண் 00649) இடையே மருத்துவ உபகரணங்களை எடுத்து செல்லும் வகையில் சிறப்பு பார்சல் எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை (வியாழக்கிழமை) காலை 5 மணிக்கு எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு இயக்கப்படுகிறது.’

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story