சென்னையில் கொரோனா தொற்று சந்தேகத்தில் 661 பேர் கண்காணிப்பில் உள்ளனர்
சென்னையில் கொரோனா தொற்று உள்ளது என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 661 பேர் கண்காணிப்பில் உள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 15 மண்டலங்களில் நடத்தப்பட்ட ஆய்வு குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையின் 15 மண்டலங்களில் இதுவரை 11 ஆயிரத்து 838 களப்பணியாளர் மூலம் ஆய்வு செய்யப்பட்டது. இதில் 15 மண்டலங்களிலும் உள்ள 10 லட்சத்து 70 ஆயிரத்து 838 வீடுகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் 20 லட்சத்து 70 ஆயிரத்து 73 நபர்கள் அணுகப்பட்டனர். ஒட்டுமொத்தமாக இதுநாள் வரை அணுகப்பட்ட வீடுகள் எண்ணிக்கை 42 லட்சத்து 3 ஆயிரத்து 287. அணுகப்பட்ட மொத்த நபர்கள் 67 லட்சத்து 56 ஆயிரத்து 897 பேர்.
இதில் ஒட்டுமொத்தமாக காய்ச்சல் சளித்தொற்று காரணமாக தொற்று உள்ளதாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் 1973 பேர் . சாதாரண காய்ச்சல், சளி என தெரியவந்தவர்கள் எண்ணிக்கை 1312 பேர். 661 பேர் சந்தேகத்தின் பேரில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதில் மண்டலம் 1 திருவொற்றியூர், 5 ராயபுரம், 8 அண்ணா நகர் ஆகிய மண்டலங்களில் அதிக எண்ணிக்கையில் கண்காணிப்பில் உள்ளனர்.
Related Tags :
Next Story