வீடு, வீடாக நடத்தப்பட்ட ஆய்வில் சென்னையில் 1,222 பேருக்கு சளி, காய்ச்சல் அறிகுறி கண்டுபிடிப்பு - 605 பேர் தொடர் கண்காணிப்பு
வீடு, வீடாக நடத்தப்பட்ட ஆய்வில் சென்னையில் 1,222 பேருக்கு சளி, காய்ச்சல் அறிகுறி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் 605 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.
சென்னை,
கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து, மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் சென்னையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரையும், அவரது வீடுகளை சுற்றி 8 கி.மீ. சுற்றளவில் உள்ள அனைத்து வீடுகளையும் தினந்தோறும் சுகாதாரத்துறை மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
மேலும் சென்னை முழுவதும் 90 நாட்களுக்கு வீடு வீடாக மாநகராட்சி அதிகாரிகள், மருத்துவக் குழுக்கள் மூலம் சளி, இருமல், காய்ச்சல் அறிகுறி இருக்கிறதா என கணக்கெடுக்கப்பட்டு வருகின்றது. இந்தநிலையில் சென்னையில் வீடு வீடாக நடத்தப்பட்ட ஆய்வில் இதுவரை 1,222 பேருக்கு சளி, இருமல், காய்ச்சல் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அவர்கள் அனைவருக்கும் செய்யப்பட்ட பரிசோதனையில் 617 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் என்றும், 605 பேரின் நிலைமை 14 நாட்களுக்கு தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும் சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தகவல் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story