டாக்டர்கள் மீது எச்சில் துப்பிய கொரோனா நோயாளி; கொலை முயற்சி வழக்கு


டாக்டர்கள் மீது எச்சில் துப்பிய கொரோனா நோயாளி; கொலை முயற்சி வழக்கு
x
தினத்தந்தி 12 April 2020 2:07 PM IST (Updated: 12 April 2020 2:07 PM IST)
t-max-icont-min-icon

டாக்டர்கள் மீது எச்சில் துப்பிய கொரோனா நோயாளிக்கு எதிராக போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திருச்சி,

திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளி ஒருவர் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டார்.  ஆனால் அவர், சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில், சிகிச்சை அளித்த டாக்டர்கள் மீது கொரோனா பாதித்த நபர் எச்சில் துப்பியுள்ளார். முக கவசத்தையும் அவர்களை நோக்கி வீசியுள்ளார்.  இதுபற்றி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.  எச்சில் துப்புவதன் வழியே கொரோனா வைரஸ் பரவும் சாத்தியம் அதிகம் உள்ளது.

இதனையடுத்து டாக்டர்கள் மீது எச்சில் துப்பிய கொரோனா நோயாளிக்கு எதிராக போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர்.  தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story