ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னார்வலர்கள் நேரடியாக நிவாரண பொருட்கள் வழங்கத் தடை
ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னார்வலர்கள் நேரடியாக நிவாரண பொருட்கள் வழங்கத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை,
ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னார்வலர்கள் நேரடியாக நிவாரண பொருட்கள் வழங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு மேலும் கூறுகையில், “நிவாரண நிதியாக இருந்தால் முதல்வர் நிவாரண நிதிக்கும் பொருளாக இருந்தால் சென்னை மாநகராட்சி ஆணையரிடமும் தரலாம்.
அரசின் அறிவுரைகளை மீறி யாரேனும் செயல்பட்டால் ஊரடங்கை மீறியதாக நடவடிக்கை எடுக்கப்படும். மற்ற மாவட்டங்களில் ஆட்சியர்களிடம் நிவாரண பொருட்களை வழங்கலாம். சில நபர்கள், கட்சி, கட்சியினர்கள் நேரடியாக நிவாரண பொருட்களை வழங்குவது தடை உத்தரவை மீறும் செயல். சமைத்த உணவுகள், நிவாரணப்பொருட்களை வழங்குவதால் தனிநபர் இடைவெளி பாதிக்கிறது" என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
Related Tags :
Next Story