கொரோனா தடுப்பு பணிகள்; முதல் அமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை
கொரோனா தடுப்பு பணிகள் பற்றி முதல் அமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது.
சென்னை,
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ளது. இதனை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளன. கடந்த மார்ச் 24ந்தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வரும் 14ந்தேதியுடன் இந்த உத்தரவு முடிவடைகிறது. தமிழகத்திலும் ஊரடங்கு அமலில் உள்ளது.
இந்த ஊரடங்கு உத்தரவு தமிழகத்தில் நாளையுடன் முடிவடைய உள்ளது. எனினும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து தமிழகத்தில் உயர்ந்து வருகிறது. நாட்டில் மராட்டியத்திற்கு அடுத்து 2வது இடத்தில் உள்ள தமிழகத்தில் 1,075 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா எதிரொலியாக பல மாநிலங்களில் வரும் 30ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், கொரோனா தடுப்பு பணிகள் உள்ளிட்டவை பற்றி சென்னை தலைமை செயலகத்தில் முதல் அமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது.
இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் சண்முகம், சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். அவர்களுடன் கொரோனா தடுப்பு பணிகள் பற்றி முதல் அமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story