வெளி மாநிலங்களில் இருந்து வரக்கூடிய நபர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும்-தலைமைச் செயலாளர் சண்முகம்
வெளி மாநிலங்களில் இருந்து வரக்கூடிய நபர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று தலைமைச்செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கினால், போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதால் வெளி மாநிலங்களில் சிக்கியுள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.
இதனால், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சிக்கியுள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பி வருகின்றனர். பல்வேறு மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்று புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கா சிறப்பு ரயில்களை இயக்கவும் மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது.
இந்த நிலையில், வெளி மாநிலங்களில் இருந்து வரக்கூடிய நபர்கள் கண்டிப்பாக 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று தமிழக தலைமைச்செயலாளர் சண்முகம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
வெளி மாநிலங்களிலிருந்து தமிழகம் திரும்பும் அனைவருக்கும் கொரொனா பரிசோதனையும் நடத்த வேண்டும். 14 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்க வேண்டும். ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்பவர்களும் 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். தனிமைப்படுத்தப்படுவதற்கான ஸ்டிக்கரை வீடுகளில் ஒட்ட வேண்டும். சிறப்பு பயண பாஸ் முறைகேடு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தலைமைச்செயலாளர் சண்முகம் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Related Tags :
Next Story