"கொரோனாவில் இருந்து சென்னையை காக்க அதிரடி திட்டம்" அச்சப்படத் தேவையில்லை" சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன்
வரும் ஒருவாரத்திற்கு கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னையில் கொரோனா தடுப்புப்பணியின் சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
சென்னை வி.ஆர்.பிள்ளை தெருவில் ஒரு தன்னார்வலர் மூலம் 52 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தன்னார்வலர்கள் அனைவரும் தாமாக முன்வந்து 10 நாட்களுக்கு ஒருமுறை டெஸ்ட் எடுத்துக்கொள்ள வேண்டும்
நமக்கு கொரோனா வராது என அலட்சியத்துடன் யாரும் இருக்கக்கூடாது.
உணவு மற்றும் காய்கறிகளை டெலிவிரி செய்யும் நபர்கள், தாமாக முன் வந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பொது இடங்களில் எச்சி துப்பக்கூடாது என மக்களை கேட்டுக்கொள்கிறோம்.
வரும் ஒருவாரத்திற்கு கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும், மக்கள் அச்சப்படத்தேவையில்லை. கொயம்பேடு சந்தை தொழிலாளர்கள் அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தபடுவார்கள். கடைகளில் பணியாற்றுபவர்களையும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வீடுவீடாக சென்று கொரோனா அறிகுறி பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள், அரசின் விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
கொரோனா தடுப்பு-போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திரு.வி.க.நகர், ராயபுரம், தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம் ஆகியவை சவாலான பகுதிகளாக உள்ளன.
கொரோனாவை ஒழிக்க மக்களின் ஒத்துழைப்பு மிக மிக அவசியம். சென்னையில் மூச்சுத்திணறல், காய்ச்சல், சளி, இருமல் இருப்பவர்கள் தாமாக பரிசோதனைக்கு முன்வர வேண்டும்.
சீல் வைக்கப்பட்ட பகுதிகளில் 20% முதல் 25% மக்கள் முகக்கவசம் அணிவதில்லை. சீல் வைக்கப்பட்ட பகுதிகளில் நோய் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் அந்த பகுதி சீல் வைக்கப்படுகிறது.
முக கவசத்தை கழற்றிவிட்டு பேசுவது முற்றிலும் தவறானது. அறிகுறி இல்லாமல் பரவவுதால் வீட்டுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்துகிறோம். மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும்; மாஸ்க் இல்லையெனில் துணியை முகக்கவசம் போல் பயன்படுத்தலாம்.அதிகாரிகள் உட்பட யாராக இருந்தாலும் பெசும்போதுகூட முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்திய மருத்துவமுறைப்படி மருந்துகள் வழங்கப்படுகின்றன. ஆதாரப்பூர்வமான மருந்துகளே கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது. தொடர்ந்து சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அறிகுறி இல்லாமல் பரவுவதால் வீட்டுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்துகிறோம். மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதிகளில் கூடுதல் விழிப்புணர்வு அவசியம்.
முன்கள பணியாளர்களுக்கு சுய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்படும். முன்கள பணியாளர்களுக்கு கொரோனா சோதனை நடத்த தனி திட்டம்.களப்பணியாளர்களுக்கு சுய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதிகமான எண்ணிக்கையில் சோதனைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். மருத்துவமனைகளில் சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். காவல்துறை உள்ளிட்ட களப்பணியாளர்களுக்கு கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கொரோனா தொற்று பரவுவதை தடுக்க தீவிரமாக செயல்பட முதல்-அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story